"ஹரியானா தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்" தலைக்கனமும், ஆணவமுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் - சாம்னா நாளிதழ் விமர்சனம்

0 143

வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தலைக்கனமும், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் ஆணவமுமே அரியானாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என உத்தவ்தாக்ரே சிவசேனாவின் சாம்னா நாளிதழ் விமர்சித்துள்ளது.

இண்டியா கூட்டணியினரை காங்கிரஸ் அரவணைத்துச் செல்லவில்லை என்றும், ஜெயிக்க வேண்டிய அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற தோல்வியிலிருந்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதன் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா இடையேயான கோஷ்டி பூசல் காங்கிரஸ் என்ற படகை மூழ்கடித்துவிட்டதாகவும் சாம்னா நாளிதழ் விமர்சித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments